விஜயகாந்த் நினைவு நாள்: பேரணிக்கு அனுமதி மறுப்பு!
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி கோரி காவல்துறையினருடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி கோரி காவல்துறையினருடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் விஜயகாந்தின் நினைவு நாளன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்: மத்திய அரசு
கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேரணிக்கு கடந்த டிச. 5 ஆம் தேதியே கோரிக்கை விடுத்த நிலையில் கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக துணைச் செயலர் பார்த்தசாரதி, பேரணிக்கு முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையினருடன் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.