தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிடுநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

DIN

காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை 4.17 மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ஆகும்.

பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.32 ஆகப் பதிவாகியுள்ளது.

திங்கள்கிழமை, ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபரில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகள் தரைமட்டமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT