விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாலை 5 மணிவரை 77.3 சதவிகிதம் மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 89,045 ஆண்களும், 95,207 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என 1,84,255 பேர் வாக்களித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.