கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி: வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டி. கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நின்றுக்கொண்டிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அலறல் சப்தம் கேட்டு வந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர், அவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனத் தெரியவந்தது.

மேலும், அப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வாக்களித்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT