மைக்ரோசாப்ட் இயங்குதளம் முடங்கிய பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் மென்பொருள் இயங்குதளம் சர்வதேச அளவில் முடங்கியுள்ளதால் வங்கி, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, தில்லி, மும்பையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. பிரச்னைக்கு என்ன காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய கணினி அவசரகால பதில் குழு(CERT) தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. தொலைதொடர்பு அமைப்புகள்(NIC) பாதிக்கப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.