தற்போதைய செய்திகள்

மத்திய பட்ஜெட்: விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி.

DIN

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ”அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் வேளாண் பொருள்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும். விவசாயத்துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT