மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,771 கன அடியாக சரிவு 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,771 கன அடியாக சரிவு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,771 கன அடியாக சரிந்தது.

DIN

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,771 கன அடியாக சரிந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியை நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தணிந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,771 கன அடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.85 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 49.12 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதாலும் நீர் தியாகப் பகுதியில் நீர் தேங்கி இருப்பதாலும் கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த மீனவர்கள் புதன்கிழமை காலை முதல் மீன்பிடிக்கச் சென்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT