புதுதில்லி: தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தில்லியில் தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
நடந்து முடிந்த மக்களவைத்தோ்தலின் வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ள நிலையில்,
தில்லியில் தேர்தல் ஆணையர்களை ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, டி.ஆர்.பாலு, சீதாரம் யெச்சூரி, டி.ராஜா. நாசீர் ஹுசைன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளன்று விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.