முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பலனில்லை: தமிழிசை

எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Updated On : 8 ஜூன், 2024 at 5:03 AM
தமிழிசை சௌந்தரராஜன்
பகிர்:

சென்னை: எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையித்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகமான வாக்குகள் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார். ஸ்டாலின் எப்போதுமே இதுபோன்ற தவறைதான் செய்வார் என தமிழிசை கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →