தற்போதைய செய்திகள்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையின் புதிய தொடர்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடித்த லாவண்யா நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடித்த லாவண்யா நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தந்தை - மகன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில், காவ்யா அறிவுமணிக்கு பின்னர், முல்லைப் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லாவண்யா. இவர், முன்னதாக சிப்பிக்குள் முத்து தொடரிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை லாவண்யா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் ஸ்வாதி ஷர்மா, ஆனந்த் செல்வம் ஆகியோர் பொம்மி - சித்தார்த் என்ற பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்தொடர் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT