பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி. 
தற்போதைய செய்திகள்

சநாதன விவகாரம்: உதயநிதிக்கு ஜாமீன் வழங்கியது பெங்களூரு நீதிமன்றம்!

சநாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

DIN

சநாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சநாதன ஒழிப்பு மாநாட்டில், சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

சநாதனம் பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி இன்று(ஜூன் 25) ஆஜரானார்.

இந்த நிலையில், இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ரூ. 1 லட்சம் பிணைத்தொகையுடன் பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணையை ஆக. 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

SCROLL FOR NEXT