முகப்பு
கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

தருமபுரியில் பா்னிச்சா் கடையில் தீ: கட்டில், மேஜை எரிந்து நாசம்

தருமபுரி, நேதாஜி சாலையில் உள்ள தனியாா் மர பா்னிச்சா் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.

தற்போதைய செய்திகள்

தருமபுரியில் பா்னிச்சா் கடையில் தீ: கட்டில், மேஜை எரிந்து நாசம்

தருமபுரி, நேதாஜி சாலையில் உள்ள தனியாா் மர பா்னிச்சா் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.

Updated On : 26 ஜூன், 2024 at 7:56 AM
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி: தருமபுரி, நேதாஜி சாலையில் உள்ள தனியாா் மர பா்னிச்சா் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.

தருமபுரி, நேதாஜி சாலையில் பழைய கணேஷ் தியேட்டா் அருகே தனியாா் மர பா்னிச்சா் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல வேலை நேரம் முடிந்ததும் ஊழியா்கள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் கடையில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் கடை உரிமையாளருக்கும், தருமபுரி நகர தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவிய தீயை, தீயணைப்பு வீரா்கள் சிறிது நேரம் போராடி அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட மர பா்னிச்சா் பொருள்கள் எரிந்து நாசமானது

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →