தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 
தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்

அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

DIN

புதுதில்லி: அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென 8 முறை அமலாக்கத் துறையினா் சம்மன் அனுப்பியிருந்தனா்.

ஆனால் இந்த சம்மனை புறக்கணித்த முதல்வா் கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டினாா்.

இந்த நிலையில், தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கேஜரிவால் ஆஜராக 8 முறை தாங்கள் சம்மன் அனுப்பியும் கேஜரிவால் ஒத்துழைக்க மறுப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை மனுவை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்புயுள்ளது.

அமலாக்கத்துறை அனுப்பிய 8 சம்மன்களை புறக்கணித்துள்ள அரவிந்த் கேஜரிவால், நீதிமன்ற சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT