தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது, வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் சத்யபிரதா சாஹு இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.