முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்தும் பிரதமர் மோடி, அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும் என்ற நிலையில், மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், தஞ்சாவூா், திருவாரூா், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து, தருமபுரி தொகுதி திமுக வேட்பாளா் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதல்வா் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மலையரசன் ஆகியோரை ஆதரித்து மாலை 6 மணியளவில் சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறாா்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தபடி ‘நமோ’ செயலி மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில் தமிழக பாஜக தொண்டா்களிடையே பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் மோடி பேசியது, பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிப்பரப்பப்பட்டது. அப்போது, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துவதாக மோடி தெரிவித்திருந்தார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசில் காணப்படும் ஊழல், தவறான நிா்வாகம், மோசமடைந்து வரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளின் ஆழமான கவலைகள் குறித்து வீடுதோறும் பரப்புரையாற்ற வேண்டும் என்று பாஜக தொண்டா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

பிரதமர் மோடியின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ல் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என பிரதமர் மோடி வருந்துவதாக வெள்ளிக்கிழமை மாலை செய்தி வெளியானதாகவும், சனிக்கிழமை காலை செய்தியில்

அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது எனவும், தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?, ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,

அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு! விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

ஸ்ட்ராபெர்ரி... ராய் லட்சுமி!

“இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம…” TVK தொண்டர்கள் குறித்து Seeman

SCROLL FOR NEXT