அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு பணியை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
"நாட்டின் இளைஞர்களே! ஜூன் 4 ஆம் தேதி நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு பணிகளைத் தொடங்குவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
பதவி கைவிட்டுப் போகும் பயத்தில் பிரதமர் மோடி பலவிதமான நாடகங்களை நடத்தி வருகிறார், ஆனால் அவரது முயற்சிகள் வெற்றியடையாது.
நீங்கள் நரேந்திர மோடியின் பொய்ப் பிரசாரங்கள் மீது கவனம் செலுத்தாமல், உங்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்.
இந்தியா சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.