தற்போதைய செய்திகள்

இந்தியா - பாக். மோதும் டி20 போட்டியின் டிக்கெட் விலை ரூ.16 லட்சமா?

ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாக். அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட் விலை ரூ.16 லட்சத்திற்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

DIN

ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரை வருகிற ஜூன் 1 அன்று அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன. டி20 தொடர் வரிசையில் 9-வது உலகக்கோப்பை தொடரான இதில், 20 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி, ஜூன் 5 அன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9 அன்று நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டைமண்ட் கிளப் டிக்கெட் விலை 20,000 டாலருக்கு (ரூ.16,64,858) விற்கப்படுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி,” ஐசிசி உலகக்கோப்பைத் தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் டையமண்ட் கிளப்பிற்கான டிக்கெட்டுகளை 20,000 டாலருக்கு விற்பனை செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்காவில் இந்த போட்டிகள் நடத்தப்படுவது விளையாட்டை விரிவுபடுத்தவும், ரசிகர்களை திரட்டுவதற்காகவுமே! வசூலில் லாபம் ஈட்டுவதற்காக அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தை ‘சர்வதேச திருடர்கள் ஆணையம்’ என்றும் விமர்சித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட் விலை 300 முதல் 10,000 டாலர் (ரூ. 25,000 முதல் 8.3 லட்சம் வரை) இருக்குமென ஐசிசி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் ரூ. 1 கோடி வரை விற்கப்படுவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

வெளிமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக்கூடாது

சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: இருவா் கைது

SCROLL FOR NEXT