தற்போதைய செய்திகள்

வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் !

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், வரும் ஜுன் 1 - ந் தேதி முதல் தொடங்க உள்ள 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

DIN

ஐசிசி 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுன் 1 -ந் தேதி முதல் ஜுன் 29 - ந் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜுன் 5 - ந் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், ஐசிசி 20 ஒவர் உலக கோப்பையின் வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.உலக கோப்பை போட்டி வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மேலும் ரவி சாஸ்திரி,ஸ்டீவ் ஸ்மித்,ஆரோன் பின்ச்,ரிக்கி பாண்டிங்,மேத்யூ ஹைடன் உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT