முல்லைப் பெரியாறு அணை 
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று(மே 28) நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று(மே 28) நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்திடம் கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வறிக்கையை சமா்ப்பித்து மனு அளித்தது.

இந்த மனுவை ஆய்வு செய்ய அமைச்சகம், கடந்த மே 14-ஆம் தேதி மத்திய அரசின் நிபுணா் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியது. இந்த மனு மீதான நிபுணா் மதிப்பீட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 28) நடைபெற இருந்தது.

கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம் தொடர்பான மனு மீதான ஆலோசனை இன்று நடைபெற இருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள லோயா்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT