முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பு Din
தற்போதைய செய்திகள்

அரைத்த மாவையே அரைக்கிறார் விஜய்: முத்தரசன்

'அரைத்த மாவையே அரைத்து வருகிறார், மாவு வீணாகிவிடும்' - முத்தரசன்.

DIN

விஜயின் கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காவிரி டெல்டா பாசன பகுதியில் தற்போது சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்களை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும். நகை கடன்கள் வழங்க வேண்டும்.

உரம், பூச்சி, மருந்து ஆகியவை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரம் பூச்சி மருந்துகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என முத்தரசன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய், திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த அவர், ”கட்சி தொடங்கப்பட்டதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே” என முத்தரசன் தெரிவித்தார்.

விஜய்யுடன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு, அவ்வாறு வைக்கும் போது தங்களிடம் தெரிவிப்பதாக தெரிவித்தார் .

நடிகர் விஜய்யின் கொள்கைகள் குறித்து கேட்டதற்கு , அரைத்த மாவையே அரைத்து வருகிறார், மாவு வீணாகிவிடும் என முத்தரசன் பதில் அளித்தார்.

தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளியோடு இணைக்கப் போவதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள்: நவ. 1 முதல் 15 வரை தேசிய கொண்டாட்டம்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

பாகிஸ்தான் மதநிந்தனை வழக்கில் முஸ்லிம் பெண் விடுவிப்பு

SCROLL FOR NEXT