சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 12 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் கடந்த சில நாள்களாக போதைப்பொருள் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ள இடங்களில் காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ரேபரேலியில் ராகுல் காந்தி!
இந்நிலையில், சென்னை ஜெ.ஜெ. நகரில் போதைப்பொருள்கள் வைத்திருந்த தனியார் கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தனியார் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி உள்பட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தநிலையில், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, போதைப்பொருள்கள், வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.