வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி. 
தற்போதைய செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN

வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் வெள்ளக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141)

பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நூல் உரைக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT