தற்போதைய செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்

DIN

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாள்களில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுவது தொடர்பாக உறுதியாகக் கூற முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT