பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களாக சந்தேகிக்கும் நபர்களை, காவல் துறையினர் துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல் துறையினர் அந்த நபர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர்கள் மீது பணம் பறித்தல், கொலை, ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிஷ்னோய் கும்பலின் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு, பிஷ்னோய் கும்பலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சபா்மதி பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து சர்வதேச அளவில் குற்றச்செயலில் ஈடுபடுபவராக அறியப்படுகிறார்.
கடந்த அக்.12-ஆம் தேதி பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.