தற்போதைய செய்திகள்

அரசியலில் நான்தான் சூப்பர் ஸ்டார்: சீமான்

இரண்டு ஸ்டார்களும் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள்.

DIN

அரசியலில் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

1989-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி, மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள், தமிழீழ போராட்டத்தில் விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும்.

இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

”நடிகர் ரஜினிகாந்த்தும் நானும் 2.15 மணி நேரம் என்ன பேசினோம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.

நாங்கள் இருவரும் பேசியதில் சங்கி ஆகிவிட்டோம் என்றால், அவரை வைத்து படம் எடுத்து சம்பாதிக்கும் நீங்கள்(திமுக) யார். உங்கள் வீட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரை கூப்பிட்டு வைத்துக் கொள்கிறீர்கள். நானும் அவரும் ஒருமுறை மட்டுமே சந்தித்தோம்.

அவர்(ரஜினிகாந்த்) திரையுலக சூப்பர் ஸ்டார், நாம்(சீமான்) அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள்.

நான் இல்லையென்றால் 8 வழிச்சாலை வந்திருக்கும், நான் இல்லையென்றால் பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிவிடுவார்கள்” என்று பேசினார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் சீமான் அவரைத் தொடா்ந்து விமா்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT