விஜய் 69 படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே!
விஜய் 69 படத்தில் இணைந்த நடிகர்கள் குறித்து...
விஜய் 69 படத்தில் பூஜா ஹெக்டே இணைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 3) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், விஜய் 69 படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு முன்னதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.