மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்). 
தற்போதைய செய்திகள்

நிகழ்ச்சி நேரத்தை தேர்வு செய்தது விமானப்படைதான்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விமானப் படையின் சாகச நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.

DIN

விமானப் படையின் சாகச நிகழ்ச்சியின் நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படைதான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் 92- ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வந்தவா்களில் ஐந்து போ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனா்.

நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

சாகச நிகழ்ச்சி இந்திய விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டதாகும். நிகழ்ச்சி நேரத்தை தேர்வு செய்தது விமானப்படைதான். அவர்கள் தட்பவெப்பநிலை, விமானம் பறக்கும் சூழல் ஆகியவற்றைக் கொண்டு நிகழ்ச்சியின் நேரத்தை திட்டமிட்டனர்.

5 பேர் உயிரிழந்ததற்குக் காரணம் வெயிலின் தாக்கம் மற்றும் நீர்சத்துக் குறைபாடேயாகும். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்

விமானப்படையினரையும் குறைகூறுவதற்கு இல்லை. முன்னதாகவே தண்ணீர் பாட்டீல், குடை, கண்ணாடி எடுத்துக்கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது.

அரசு தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு இருந்தது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு இருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT