மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததன் காரணமாக, நேற்று(அக். 19) காலை வினாடிக்கு 18,384 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நீர்வரத்து இன்று(அக். 20) காலை வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு பிரிவில் வழக்கு!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 95.88 அடியிலிருந்து 96.90அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 60.89 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.