தற்போதைய செய்திகள்

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்.

DIN

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம் தேதியும், நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், புதன்கிழமை காலை வெளியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT