மகாவிஷ்ணு  
தற்போதைய செய்திகள்

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மகாவிஷ்ணு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனர்.

இதனிடையே, மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு தாக்கல் செய்த நிலையில், 3 நாள் அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT