தூத்துக்குடி: குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சுழல் காற்றானது 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையுடன், பலத்த கடற்காற்று வீசக்கூடும். குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சுழல் காற்றானது 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து மீன்வளத்துறை அறிவுறுத்தலின் படி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுபோன்று திரேஸ்புரம், இனிகோ நகர், புதிய துறைமுக கடற்கரை, வேம்பார், தருவைகுளம், பெரியதாழை, மணப்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து குறைவான அளவிலே நாட்டுப் படகுகள் கடலுக்கு சென்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.