முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 3:51 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசன மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,619 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,631 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 113.12 அடியிலிருந்து 112.39 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 81.85 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →