வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின். படம்: டிஐபிஆர்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில்.

DIN

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் பேரவைத் தொகுதியில் இன்று (செப். 24) பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.

கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு துவக்கப் பள்ளி, மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர், ”கொளத்தூர் எனது சொந்தத் தொகுதி, நான் நினைத்த நேரத்தில் இங்கு வருவேன். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அதுவே போதுமானது. அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவையில் மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாள்களாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் பரவிவரும் நிலையில், மாற்றம் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

SCROLL FOR NEXT