ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தல்: 1 மணி நிலவரம்!
ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான பிற்பகல் 1மணி நிலவரம்.
ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான, பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் 2-வது கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(செப்.25) காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், இத்தோ்தலில் மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
Advertisement
Advertisement
வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 3,502 வாக்குச்சாவடிகளில் 13,000 வாக்குச்சாவடி அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதில் 1,056 வாக்குச்சாவடிகள் நகரங்களிலும் 2,446 வாக்குச்சாவடிகள் கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை மேம்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக காவல் துறை, ஆயுதக் காவல்படை, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை சோ்ந்த அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.