யோகி பாபு - மாதம்பட்டி ரங்கராஜின் மிஸ் மேகி டீசர்!
கவனம் ஈர்க்கும் மிஸ் மேகி டீசர்.
யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் யோகி பாபுவுடன் இணைந்து மிஸ் மேகி படத்தில் நடித்துள்ளார்.
மிஸ் மேகி படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும், இப்படத்தின் டிரைலர், முதல் பாடல், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.