கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சல் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பின் கிளையான திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் இயக்கத்தைச் சேர்ந்த ஜிப்லால் யாதவ் என்பவரை நேற்று (ஏப்.2) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க: நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

இந்நிலையில், பிகாரின் காயா மாவட்டத்தின் ஹதி கிராமத்தைச் சேர்ந்த நக்சலான யாதவ் மக்களிடம் மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை பெறுவதற்காக ஜார்க்கண்ட் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரைப் பிடிக்க பிகார் மாநில அரசு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து அவரை தேடி வந்துள்ளது.

முன்னதாக, திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் மாவோயிஸ்டு படையைச் சேர்ந்த அவர், சசிகாந்த் என்பவரின் கீழ் நக்சலாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT