தற்போதைய செய்திகள்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு தொடர்பாக...

DIN

உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வரின் வருகையையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வள்ளிக்கும்மி மகளிருக்கு பாராட்டு விழா: உதகை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் தனியாா் விடுதிக்கு வரும் முதல்வர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னா், மாலை 5.30 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி. புற்றுநோய் மருத்துவ மையத்தை திறந்துவைக்கிறார்.

இதையடுத்து, வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த 10 ஆயிரம் மகளிருக்கு மாலை 6 மணிக்கு கோவை, கொடிசியாவில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறாா்.

இதையும் படிக்க: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT