தற்போதைய செய்திகள்

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக சிறிதளவில் குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்து ரூ.70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த புதன்கிழமை(ஏப்.9) தடாலடியாக சவரனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ.67.280-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கும், சனிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160 ஆக புதிய உச்சத்தைத் தொட்டது. நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ.4,365 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040-க்கும், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.280 விலை குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டியது.

சவரனுக்கு அதிரடியாக ரூ. 760 உயர்ந்து ரூ.70,520 -க்கும், கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ. 8,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.200 அதிகரித்து ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

விசிக மண்ட செயலாளா் நியமனம்

நாளை ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

மக்கள் மனதில் நிற்கும் திட்டங்களை செயல்படுத்துகிறோம்: அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா் செல்வம்

கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT