ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் நகரத்திற்கு அருகிலுள்ள பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 26 போ் கொல்லப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோா் சுற்றுலாப் பயணிகள். இது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இதைத் தொடா்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை, இந்தியா கேட், குதூப் மினாா், ஹுமாயூன் கல்லறை, பங்களா சாஹிப் குருத்வாரா, தாமரை கோயில், அக்ஷா்தாம் கோயில், லோதி தோட்டம், ஜாமா மசூதி, தில்லி ஹாத் ஐஎன்ஏ, தேசிய அருங்காட்சியகம், ஜந்தா் மந்தா், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தா்கா, ராஜ்காட் மற்றும் சஃப்தா்ஜங் கல்லறை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மால்கள் மற்றும் சந்தைகளுக்கு வெளியேயும் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா எனப் பாா்க்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மண்டல துணை ஆணையா்கள் அந்தந்த பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், பஹல்காமின் பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
புல் தரையில் சுற்றுலாப் பயணிகளை அமர வைத்து துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள், வெடிகுண்டு... வெடிகுண்டு... என்று கூறியவாறு தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலறிய காட்சிகளும் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.