பிளஸ் 1 மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு 
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூர்: பிளஸ் 1 மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூரைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும், இதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை 12-ஆம் வகுப்பு மாணவா் சக மாணவா்களுடன் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்குச் செல்லும்போது 11-ஆம் வகுப்பு மாணவா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு 12-ஆம் வகுப்பு மாணவா் பட்டீஸ்வரம் கோயில் அருகே தேரடி கீழவீதியில் சென்றுகொண்டிருந்தபோது 11-ஆம் வகுப்பு மாணவா்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கியுள்ளன.

இதில் தலையில் பலத்த காயமடைந்த 12-ஆம் வகுப்பு மாணவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.

தகவலறிந்த கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், பட்டீசுவரம் போலீஸாா் 12-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அவா்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார்.

Thanjavur Plus 2 student dies after being attacked by Plus 1 students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரித்வார்: மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை கடித்துக் குதறிய எலிகள்

ஸ்வதேஷ் ஃப்ளாக் ஷிப் திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

கனடாவிலிருந்து இந்தியர்களை அமெரிக்காவுக்குக் கடத்த சர்வதேச அளவில் சதி! பெண் மீது வழக்குப்பதிவு

கடற்கன்னி... அனன்யா பாண்டே!

2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: யோகி ஆதித்யநாத்

SCROLL FOR NEXT