புதிய உச்சத்தில் விற்பனையாகி வரும் வெள்ளி 
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

வெள்ளி ஓரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஓரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.96,320-க்கு விற்பனையானது. தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,03-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.

உச்சத்தில் வெள்ளி

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.207 உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயா்ந்து ரூ.2.07 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Silver rises by Rs. 8,000 per kg in a single day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலருடனான புகைப்படங்களை நீக்கிய நிவேதா பெத்துராஜ்! திருமணம் நிறுத்தம்?

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

பயணிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இண்டிகோ ஊழியர்கள்!

2 நாள் சரிவுக்குப் பிறகு இன்று பங்குச்சந்தை மீளுமா?

கபடி வீரராக சிம்பு? மதுரையில் அரசன் படப்பிடிப்பு!

SCROLL FOR NEXT