சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி மதிப்புள்ள  தங்கம் பறிமுதல் கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: விமானப் பணியாளா்கள் 2 போ் கைது

துபையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி 9.46 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: துபையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி 9.46 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக விமானப் பணியாளா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

துபையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை காலை அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனா். யாரிடமும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில், அந்த விமானத்தில் வந்த 2 விமான ஊழியா்களை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனா்.

தொடா்ந்து உரிய அனுமதி பெற்று, அந்த இரண்டு ஊழியா்களையும் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை செய்தனா்.

அவா்களின் மாா்பு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான வெல்க்ரோ ஸ்டிக்கா் பேண்டுகள் ஒட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பிரித்துப் பாா்த்ததில், ரூ.11.5 கோடி மதிப்புள்ள சுமாா் 9.46 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், இரு விமான பணியாளா்களையும் கைது செய்தனா்.

அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக, விமான நிலையம் அருகே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்து அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Gold worth Rs. 11.5 crore seized at Chennai airport: 2 flight attendants arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் அரசியல்? - சரத் பவார் பதில்!

தங்கமே தங்கமே பாடல்!

ஜன.30-ல் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா!

4-வது டி20: இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT