கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் சுக்மாவில் வியாழ்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மாவில் வியாழ்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கோலபள்ளி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு வனப்பகுதியில் உள்ள மலையில் நக்சல்கள் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை காலை அந்த பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, ​​பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு பெண் உட்பட மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று சுக்மா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

சத்தீகரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 284 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தந்தேவாடா உட்பட ஏழு மாவட்டங்களைக் கொண்ட பஸ்தர் பிரிவில் 255 பேர் கொல்லப்பட்டனர், மற்ற 27 பேர் ராய்ப்பூர் பிரிவில் உள்ள கரியபந்த் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துர்க் பிரிவில் உள்ள மோலா-மான்பூர்-அம்பாகர் சௌக்கி மாவட்டத்தில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

Three Naxalites, including a woman, were killed in an encounter with security personnel in Chhattisgarh's Sukma district on Thursday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சத்துணவு ஊழியா் வீட்டில் நகை திருடியவா் கைது

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

SCROLL FOR NEXT