நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படை, மாநில காவல் துறையின் சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து இன்று (பிப்.1) நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, காலை 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர்!

இந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதினால் இது குறித்த முழுமையான தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

முன்னதாக, நேற்று (ஜன.31) அப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் மேற்கு பஸ்டார் பிரிவுனரின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

அகமதாபாத்தில் தங்கக் கடத்தலை முறியடித்த டிஆர்ஐ அதிகாரிகள்!

கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் அல்ல; தீர விசாரிப்பதே மெய்! - ‘அவிஹிதம்’

பெர்த் டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு!

தஞ்சைப் பெரிய கோயில் - 50 வேலைத்திட்டம் - நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT