கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

மெக்சிகோ: கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹோண்டுராஸுக்கு வடக்கே கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0.3 மீ முதல் 1 மீட்டர் வரை உயரம் கொண்ட அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க: தகர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கோட்டை!


இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தீவுப்பகுதியில் இருந்து நிலப்பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT