லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இது இந்தியாவின் குறைக்கடத்தி பயணத்தில் மேலும் ஒரு மைல்கல். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் ஒரு பெரிய நம்பிக்கை வாக்கு என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், செமிகண்டக்டர் துறைக்கு வேஃபர்-ஃபேப்ரிகேஷன் உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் உலகளாவிய சப்ளையர் ஆகும். ஜனவரி 1980 இல் நிறுவப்பட்ட லாம் ரிசர்ச் தற்போது உலகின் முன்னணி குறைக்கடத்தி நிறுவனமாகும்.
Advertisement
Advertisement
குறைக்கடத்தி துறையில் முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகள் இந்திய குறைக்கடத்தி பயணத்தின் ஒரு பகுதியாகும். குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிறுவுவதே இதன் குறிக்கோள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.