மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; முதல்வர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வர் ஸ்டாலின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்தவர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் முதல்வர்; அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; முதல்வர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT