தற்போதைய செய்திகள்

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு!

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு.

DIN

கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.90.74 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வலதுபுறப் பகுதியை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவு எண்.47-க்கு மாற்றாக ரூ.90.74 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.

பின்னா், அமைச்சா் எ.வ.வேலு பேசியது:

தமிழகத்தின் முக்கிய சாலையாக இது விளங்குகிறது. மேலும், இந்தப் பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த மேம்பாலம் ரூ.90.74 கோயில் கட்டப்பட்டது. இதன் மூலம் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்றாா்.

நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா் ஆா்.செல்வராஜ், சாலை மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா(தாம்பரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் செம்பருத்தி துா்கேஷ், நகா்மன்றத் தலைவா்கள் ஜெ.சண்முகம் (மறைமலை நகா்) தேன்மொழி நரேந்திரன் (செங்கல்பட்டு), மறைமலை நகா் நகா்மன்றத் துணைத் தலைவா் சித்ரா கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT