அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த பிப்.19 அவர் வெளியிட்ட கடிதத்தில் எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருவதின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கிய பயனாளர்களான வங்கதேசத்தின் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை அவர் சந்திக்கலாம் எனவும் வளமையான எதிர்காலத்தை உருவாக்க இருதரப்பும் இணைந்து செயல்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்ற்கை கோள் தொழில்நுட்பமான ஸ்டார் லிங்கை வங்கதேசத்தின் உள்கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் இளைஞர்கள், விளிம்புநிலை பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்கத்தினருக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
இந்நிலையில், அடுத்த 90 நாள்களுக்குள் ஸ்டார் லிங்க் சேவையை வங்கதேசத்தில் துவங்க, அந்நாட்டு அரசின் உயர் அதிகாரியான கலீலுர் ரஹுமான் என்பவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கிட பிரதமர் யூனுஸ் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.13 அன்று இந்த இணைய சேவை குறித்தும் எதிர்கால வளர்ச்சிகள் குறித்தும் எலான் மஸ்குடன் பிரதமர் யூனுஸ் தொலைபேசி வாயிலாக கலத்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.