கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை

DIN

சென்னை: மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு பகுதியை சோ்ந்தவா் சீரியல் நடிகை ரேணுகா. தனது குடும்பத்தினருடன் மைசூருவில் இருந்து காவேரி விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, ஆவடி அருகே ரயில் வந்துகொண்டிருந்த போது அந்த பெட்டியில் இருந்து இளைஞர் ஒருவர் சீரியல் நடிகையின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளாா். இதனால், சுதாரித்துக்கொண்ட நடிகை, அவரிடம் தனது கைப்பையை கொடுக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் கைப்பையை ஓடும் ரயிலிலிருந்து வெளியே எறிந்துள்ளாா்.

இதையடுத்து ரயிலின் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சீரியல் நடிகை தனது உறவினா்களுடன் கைப்பை எறியப்பட்ட பகுதியில் இருந்து பையை மீட்டு எடுத்து வந்துள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார், ரயிலிலிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து கைது செய்தனர்.

ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா், வாலஜா பகுதியை சோ்ந்த வசந்தகுமாா் என்பதும், இவா் சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

வசந்தகுமாரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT